6.விறன்மிண்ட நாயனார்

அமைவிடம் : temple icon.viranmindar
வரிசை எண் : 6
இறைவன்: மகாதேவர்
இறைவி : பார்வதியம்மை
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : செங்கனூர்
முக்தி தலம் : திருவாரூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை திருவாதிரை
வரலாறு : திருவாரூர் கோயிலிலே தேவாசிரிய மண்டபத்தில் இவர் அமர்ந்திருந்தபோது சிவனடியார்களை வணங்காமல் சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரை கண்டு சினம் கொள்கிறார். அதனால் அவரையும் அவரை ஆட்கொண்ட சிவனும் புறகு என்கிறார். இறைவன் ஆணைப்படி சுந்தரர் பின்பு அடியார்களின் பெருமையை வளக்கித் திருத்தொண்டத் தொகை பாடுகிறார்.
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : நிர்வாக அறங்காவலர்
அருள்மிகு. மகாதேவர் கோயில்
செங்கனூர் - 689121
தொலைபேசி : 0479-2450555

இருப்பிட வரைபடம்


திருவார் பெருமை திகழ்கின்ற தேவாசிரியனிடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வந்தொண்டன் புறகு என்று உரைப்பச் சிவனருளால்
பெருகா நின்ற பெறும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்
    	           - பெரிய புராணம் 497
பாடல் கேளுங்கள்
 திருவார்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க